அறம் அறகட்டளையின் 2023ஆம் ஆண்டுக்கான இளம் தொழில் முனைவோருக்கான விருது (Young Businessman Award) நமக்கும் நம் நிறுவனத்திற்க்கும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.
கடுமையான வேலை நெருக்கடி மற்றும் சென்னை மழை வெள்ள நேரம் என்பதால் விருது விழாவிற்க்கு நேரடியாகச்செல்ல முடியவில்லை. இன்று (08/01/2024) தனியார் அஞ்சல் மூலமாக விருதைப் பெற்று கொண்டோம்!
கடந்த ஆறு வருட காலத்தில் இரண்டு உணவகங்கள், ஒரு தொடக்கபள்ளி, ஒரு நியாய விலைக்கடை, சிறிய பாலங்கள், குளக்கரை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று மற்றும் சிறிய, பெறிய வீடுகள் என 42க்கும் அதிகமான கட்டிடங்களை கட்டியிருக்கிறோம்.
இந்த சிறிய கால இடைவெளியில், இந்த சிறுவனுக்கு, இத்தனை போட்டி நிறைந்த ஒரு துறையில் இத்தனை பெரிய வாய்ப்புகளை கொடுத்து உயர்த்தி பிடித்த உங்களது நம்பிகையினை நன்றி என்ற ஒரு சிறிய வார்த்தைக்குள் நிச்சயம் அடைக்க முடியாது..!
என்றும் எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என் அன்பு சொந்தங்களாகிய வாடிக்கையாளர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் பாதம் பணிந்த நன்றி.
வரும் ஜனவரி -16 ஆம் நாள் நமது நிறுவனம் தொடங்கி உங்கள் அனைவரின் பேராதரவோடு ஆறு வருட பயணத்தை நிறைவுசெய்து வெற்றிகரமாக ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இத்தனை உணர்ச்சிமிகுந்த தருனத்தில் இத்தகைய விருது எங்கள் கைகளுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை, பொறுப்பை கொடுத்திருக்கிறது.
இந்த நேரத்தில் என் உயிரினும் மேலான எங்கள் கரிகாலச்சோழன் அணியினருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தொடர்ந்து உங்கள் நிறைவான ஆதரவை எதிர்நோக்கி, உங்கள் கனவுகளை நிறைவேற்ற காத்திருக்கிறான் இந்த கரிகாலச்சோழன்.
அத்தனை காதலுக்கும், நம்பிக்கைக்கும், வாய்ப்புகளுக்கும் எங்கள் பாதம் பணிந்த நன்றி நன்றி நன்றி…!
—
மாறாத நம்பிக்கையோடு
என்றும் உங்கள் கரிகாலச்சோழன் (எ)
பொறியாளர். அமர்நாத் அருள்.