பழங்காலம் முதல் ஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் மனதிற்கு பிடித்தமான, அழகான வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கும். அது சிறுவயதில் தோன்றினாலும், இளைய வயதில் தோன்றினாலும், முதிய வயதில் தோன்றினாலும்.
குறிப்பாக தற்பொழுது பலரும் தாங்கள் வீடு கட்ட வேண்டும் என்று எண்ணியுடன் பலதரப்பட்ட அழகான வீடுகளை அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்துவிட்டு படம் எடுத்து குறிப்பிற்காக சேமித்துக் கொள்கிறார்கள். பின்னர் பொறியாளர்களிடம் அதை காட்ட, அதையே அவர்களை வைத்து கட்டிடவும்.
மேலும் இணையத்திலும் அழகான வீடுகளின் படங்கள், காணொலிகளை சேமித்து வைத்துக்கொண்டு இது போல் கட்டி தாருங்கள் என்கிறார்கள். உதாரணத்திற்கு பழைய கட்டிட வடிவமைப்பில் வேண்டும் என்கிறார்கள், சிலர் தற்காலத்திற்கு ஏற்ப வடிவமைத்து கட்டி தாருங்கள் என்கிறார்கள். நாங்கள் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அழகான வீடுகளை கட்டித்தருகிறோம்.


