சமீபத்தில் மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறம் நம்மால் தொடங்கி அடித்தளம் கட்டப்பட்டு வரும் 1600 சதுர அடி அளவுக் கொண்ட நமது நிறுவனத்தின் 42வது கட்டுமான பணியான Duplex Houseன் தோற்றத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்!
தரைதளத்தில் குளியலறையுடன் கூடிய ஒரு படுக்கையறை, கூடாரம், உணவருந்தும் அறை, சமையலறை, உட்புற மாடி படிகட்டுகள், அமர்ந்து இளைப்பாறும் அறை என வடிவமைக்கபட்டுள்ளது.
உட்புறபடிகட்டின் வழியே முதல்தளத்திற்க்கு சென்றால் ஒரு கூடாரம் மற்றும் குளியலறையுடன் கூடிய ஒரு முதன்மை உறங்கும் அறையுடன் balcony, குழந்தைகள் அறையுடன் வடிவமைத்து முடித்து வேலைகள் நடந்து வருகிறது.
வாய்ப்பு வழங்கிய வாடிக்கையாளர் அவர்களுக்கு எங்களின் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.